ரகசிய வீடியோ விவகாரம்.. தவெக பெண் நிர்வாகியின் செல்போன் பறிப்பு.. தூத்துக்குடியில் டிவிகே நிர்வாகி கைது!
Police Arrested TVK Member : தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினரின் செல்போனை திட்டமிட்டு பறித்து சென்ற சம்பவத்தில் த வெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் .
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ரோகினி (35 வயது). இவர், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 26- ஆம் தேதி ஆறுமுகநேரி- அடைக்கலாபுரம் சாலையில் மற்றொரு தவெக உறுப்பினரான ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த சிபாஸ் ( 28 வயது) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரோகினியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். உடனே, அருகில் நின்று கொண்டிருந்த சிபாஸ் ஓடி சென்று அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால், அந்த நபர் பைக்கில் வேகமாக சென்று விட்டார்.
தவெக பெண் நிர்வாகி செல்போனில் ரகசிய வீடியோக்கள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரோகினி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மணப்பாடு பகுதியை சேர்ந்த தவெக உறுப்பினர் ரூஸ்வெல்ட் ( 44 வயது) என்பவருக்கும், ரோகிணிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ரோகினியிடம் கட்சியில் பொறுப்பு வாங்கி தருமாறு ரூஸ்வெல்ட் கேட்டு வந்த நிலையில், இருவரின் ரகசிய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் ரோகினியின் செல்போனில் இருந்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க: திருமணமாகாத ஆண் மது அருந்தினால் ரூ.5000 அபராதம் – வினோத கட்டுப்பாட்டு – டிடிவி தினகரன் பாராட்டு




செல்போனை பறித்த வழக்கில் தவெக நிர்வாகி கைது
இதை அறிந்த ரூஸ்வெல்ட் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி, ரோகினியின் செல்போனை கைப்பற்றுவதற்கு சிபாஸின் உதவிய நாடியுள்ளார். அதன்படி, சிபாஸ் தனது நண்பரான உடன்குடியை சேர்ந்த புனித ராஜ் மூலம் செல்போனை பறித்து சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, சிபாஸை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் புனித ராஜ் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வருகிறார். தற்போது, புனித ராஜிடம் இருந்து செல்போனை பெற்று தலைமறைவாக உள்ள தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் ரூஸ்வெஸ்ட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தவெகவில் பெரும் அதிர்வலைகள்
அவர் கைதாகும் பட்சத்தில், அவரிடம் உள்ள ரோகினியின் செல்போனில் இருக்கும் ரகசிய வீடியோக்கள் குறித்த முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக வெற்றிக் கழக கட்சியில் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது தவெக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் – அதிர்ச்சி சம்பவம்