AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி வேட்டை.. தருமபுரி ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 5 மீது வழக்கு பதிவு.. ரூ.14.50 லட்சம் பறிமுதல்!

Dharmapuri Anti Corruption police Raid : தருமபுரி மாவட்டத்தில் கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ. 14 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி வேட்டை.. தருமபுரி ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 5 மீது வழக்கு பதிவு.. ரூ.14.50 லட்சம் பறிமுதல்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Aug 2026 17:19 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள கெருகம்பாக்கத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான இங்கு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன. இதனால், கட்டட அனுமதி பெறுவதற்கு கெருகம்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், ஆலந்தூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சம்பவத்தன்று கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி மற்றும் துணைத் தலைவர் லைலா, ஊராட்சி ஒன்றிய செயலாளர் தனிகாசலம் உள்ளிட்டோர் கட்டு கட்டாக பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது போலீசாரிடம் சிக்கினர். அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து எண்ணியதில் ரூ.14.25 லட்சம் இருப்பது தெரிய வந்தது.

முன்னுக்கு பின் முரணான பதிலளித்த தலைவர்

இது தொடர்பாக, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், அந்த பணம் தனது மேஜைக்கு எப்படி வந்தது என்றும் தெரியாது என்று பதிலளித்தார்கள். மேலும், அலுவலகத்தில் இருந்த வி. ஜி. என். நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் திருமண செலவுக்கு கொண்டு வந்ததாக முன்னுக்குப் பின் முரணான பதிலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அது லஞ்ச பணமாக இருக்கலாம் என்று கருதி அதனை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: நெல்லையில் கவர்ச்சி வலை விரித்து லட்சக்கணக்கில் மோசடி.. போலீசிடம் சிக்கிய 2 ஜகஜால இளம் பெண்கள்!

அலுவலக ஊழியர்களிடம் தொடர் விசாரணை

மேலும், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரிடம் ரூ.32 ஆயிரத்து 200 பக்கம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி கூறிய காரணங்கள் உண்மைக்கு மாறாக இருந்தன. இதனால், திருப்தி அடையாத லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

இதில், மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: திருமண கனவோடு இருந்த இளம்பெண்.. எமன் ரூபத்தில் வந்த சரக்கு லாரி.. கண்ணிமைக்கு நேரந்தில் நிகழ்ந்த கொடூரம்..!

Follow Us