AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் – அதிர்ச்சி சம்பவம்

Stray Dog Attacks in Madurai : மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் – அதிர்ச்சி சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Aug 2026 19:01 PM IST

மதுரை, ஆகஸ்ட் 13 : மதுரை மாட்டுத்தாவணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சியின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள்

தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து. தென் மாவட்டங்களையும் வட மாவட்டங்களையும் இணைக்கும் இந்த பேருந்து நிலையம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றப்பட்டாலும் அந்த ஊர் மக்கள் இன்னும் அதனை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்றே அழைக்கின்றனர்.

இதையும் படிக்க : சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!

இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அதனை சுற்றியுள்ள காய்கறி மார்கெட், பூ மார்கெட், தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் வலம் வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். அப்படி வாகனங்களில் வருபவர்களில் வருபவர்களை துரத்துவதாகவும், நடந்து செல்பவர்களை கடிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 12, 2026 நேற்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைடுத்து தெரு நாய்களை உடனடியாக பிடித்து அவற்றுக்கு தடு்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாட்டுத்தவணி பகுதியில் பணியாற்றி வரும் அருள்ராஜ் கூறுகையில், “புதன்கிழமை (ஆகஸ்ட் 12) மட்டும் மாட்டுத்தாவணி பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுடன், நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார். மேலும், அங்கு சுற்றித் தெரியும் நாய்களையெல்லாம் பிடித்துக் கொண்டு வந்து நாய்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : கீழ் மதுரையில் பெரும் பரபரப்பு.. ரயிலை நிறுத்த தவறிய லோகோ பைலட்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மாட்டுத்தாவணி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow Us