தமிழகத்தில் பலத்த காற்றுடன் 2 நாட்களுக்கு கனமழை – எங்கெல்லாம் தெரியுமா?
Heay Rain Alert : தமிழகத்தில் ஆகஸ்ட் 13 மற்றும் ஆகஸ்ட் 14, 2026 ஆகிய 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 13 : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 13, 2026 இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பலத்த காற்றுடன் 2 நாட்களுக்கு கனமழை
மேலும், ஆகஸ்ட் 14, 2026 நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிக்க : “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!




அதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15, 2026 சனிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 17, 2026 தேதி ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழையும், வரும் ஆகஸ்ட் 18, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : உலக யானைகள் தினம்: தமிழக காடுகளில் 3,170 யானைகள் – அமைச்சர் ரஞ்சித் குமார்
அதனைத் தொடர்ந்து 19, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 17ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.