AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலக யானைகள் தினம்: தமிழக காடுகளில் 3,170 யானைகள் – அமைச்சர் ரஞ்சித் குமார்

இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன.

உலக யானைகள் தினம்: தமிழக காடுகளில் 3,170 யானைகள் – அமைச்சர் ரஞ்சித் குமார்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Aug 2026 11:31 AM IST

ஆகஸ்ட் 12, 2026: உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயற்கையின் பெருமிதமான அடையாளமும், எமது காடுகளின் உண்மையான காவலர்களுமான யானைகளைப் பாதுகாப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகக் காடுகளில் சுமார் 3,120 யானைகள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: மின் கட்டணம் தொடர்பாக சின்னத்திரை நடிகையின் பரபரப்பு புகார்.. மின்வாரியம் தொடர்பு கொண்டும் விவரங்கள் பகிர மறுப்பு..

யானைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம்:


இதுதொடர்பாக அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல் மற்றும் மனிதர் – யானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன.

தமிழக காடுகளில் 3,120 யானைகள்:

2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,120-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9.1 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் மனிதர் – வனவிலங்கு மோதல்களைத் தடுக்க இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சுமார் ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும்.

மேலும் படிக்க: “கோவையில் மீண்டும் கொடூரம்!”.. வீடு புகுந்து பெண் அடித்துக் கொலை.. தனிப்படை அமைத்து தீவிர விசாரணை!

“யானைகளைப் பாதுகாப்போம்; வனங்களைப் பாதுகாப்போம். வனத்துறையுடன் இணைந்து மனிதர் – யானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow Us