AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு.. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – அமைச்சர் கீர்த்தனா..

தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வளங்களும் தமிழ்நாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துள்ளார். வேலைவாய்ப்புக்காக யாரும் சொந்த ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், 21 நாட்களுக்குள் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.

100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு.. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – அமைச்சர் கீர்த்தனா..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Aug 2026 13:14 PM IST

ஆகஸ்ட் 13, 2026: சென்னையில் நடைபெறும் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான சுமார் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 998 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

15 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

மாநாட்டில் ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. “தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலம்”

மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!

100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடுகள்:


மேலும், “97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைத்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” என அமைச்சர் தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வளங்களும் தமிழ்நாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துள்ளார். வேலைவாய்ப்புக்காக யாரும் சொந்த ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், 21 நாட்களுக்குள் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.

மேலும், தமிழகத்தின் தொழில் பரிமாணங்களை இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மாற்றியமைக்கும் என்றும், தமிழகத்தில் திறமையான மனித வளம் அதிக அளவில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: “சென்னையில் 53 கி.மீ தொலைவிற்கு வாட்டர் மெட்ரோ!”.. பக்கிங்காம் கால்வாயில் பிரம்மாண்ட திட்டம்.. மிரட்டல் அறிவிப்பு!

“இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எங்களது பாதையை காட்டுகின்றன. ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

Follow Us