விஜய் – ஜோசப் விஜய்யாக மாறியது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சுவாரஸ்ய பதில்
Minister Aadhav Arjuna : மிலாது நபியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், எப்போதும் விஜய், விஜய் என்று சொன்ன கட்சித் தலைவர், வேட்பாளர் தேர்வு அறிவிப்பின்போது 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டார்
சென்னை, ஆகஸ்ட் 26 : பிறப்பால் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை சொல்வதற்காக வேட்பாளர் தேர்வு அறிவிப்பின்போது ஜோசப் விஜய் என குறிப்பிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். மிலாது நபியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகள். சில மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்து, இறைத்தூதர்களாக வாழ்ந்து, உலகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வார்கள். அந்த வகையில், நபிகள் நாயகம் இறைத்தூதராக விளங்கினார். தனக்கென்று வாழாமல், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் வாழ்ந்தார் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த அரசு அனைவருக்குமான அரசாக உள்ளது. அதனால்தான் ஷாஜகான் இங்கே அமைச்சராக உள்ளார். விசிகவில் ஒரு தலித் அமைச்சராகியுள்ளார். குடிசையில் இருந்து கோட்டைக்கு ஒருவர் வருகிறார் என்றால், அதுதான் உண்மையான மாற்றம். ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. அந்த அளவிற்கு நல்லவர்கள். அரசியலில் இது தவறான நடைமுறை. பர்வேஸ், ஷாஜகான் போன்றோருக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட அதிகாரம் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க : ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!




ஜோசப் விஜய்யாக மாறியது ஏன்?
“எப்போதும் விஜய், விஜய் என்று சொன்ன கட்சித் தலைவர், வேட்பாளர் தேர்வு அறிவிப்பின்போது ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டார். பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் என்பதைச் சொன்னார். முதல்வர் எந்த ஜாதி, எந்த மதம் என்று பார்க்காமல், பெண்களும் இளைஞர்களும் அதிகளவில் ஆதரவு தெரிவித்தனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பு தருவோம் என்று பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகள் சொல்வார்கள். பாதுகாப்பு தருவது மட்டும் அரசின் அல்லது அரசியலின் வேலை அல்ல. அதிகாரம் தருவதுதான் சரியான அரசாகவும், அரசியலாகவும் இருக்க முடியும். அதைத் தவெக செய்திருக்கிறது என்றார். மேலும், எனது அம்மா ஒரு விவசாயி. எனக்கு 6 வயதாக இருந்தபோது, அவர் தவறான முடிவெடுத்தார். விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்குத் தெரியும் என்று பேசினார்.
இதையும் படிக்க : 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!
இதற்கிடையில் முதல்வர் விஜய் தனது மிலாது நபி வாழ்த்து பதிவில், அன்பு, இரக்கம், சமத்துவத்தை பேணுவோம். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, நலம் பெருகட்டும். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மிலாது நபி நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.