AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்? என்ன நடந்தது?

TN Arasu Cable Crisis : அரசு கேபிள் டிவி சார்பாக கடந்தத ஒரு வாரமாக கேபிள் டிவி ஆபரேட்டர்களால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. செட் டாப் பாக்ஸ் வழங்கும் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகை செலுத்ததாதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்? என்ன நடந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Aug 2026 07:52 AM IST

சென்னை, ஆகஸ்ட் 26 : தமிழகத்தில் அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் அரசு கேபிள் டிவி முடங்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு கேபிள் டிவி சார்பாக மாதம் ரூ.200 கட்டணத்தில் 200க்கும் மேற்பட்ட சேனல்கள் வழங்கப்படுகின்றன. தனியார் டிடிஎச் போன்ற சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் செலவிட வேண்டியிருப்பதால் மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனளிக்க கூடியதாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்?

இந்த நிலைில் அரசு கேபிள் டிவி சார்பாக கடந்தத ஒரு வாரமாக ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக புதிதாக யாருக்கும் இணைப்பு வழங்கி ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனம் என்றாலும் அதன் செட் டாப் பாக்ஸ் வழங்குதல், சர்வர் பராமரிப்பு போன்றவற்றை தனியார் நிறுவனம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் பழுதடைந்த பாக்ஸ்களை மாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்துக்கு முறையாக பணம் செலுத்தாதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில நீடித்தால் அரசு கேபிள் டிவி நிறுவனம் முடங்கும் அபாயம் உள்ளதாக கூறப்ப்படுகிறது. இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க : தென்காசியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்..

தற்போது சர்வர் முடங்கியதால் யாருக்கும் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்கள் என்ற சேவையும் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது. அரசு தலையிட்டு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் தனியார் நிறுவனத்துக்கு நிலுவை தொகையை வழங்காததால் அந்நிறுவனம் ஒளிபரப்பு சேவையை முடக்கியது. இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றம் உத்ரவையடுத்து மீண்டும் ஒளிபரப்பு சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக வெளிப்படையாக செயல்படவில்லை – பெ. சண்முகம்..

தற்போது அரசின் தொழில்நுட்ப பணியாளர்களை வைத்தே இந்த பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் அரசு கேபிள் டிவி முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னைக்கு அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow Us