சைபர் கிரைம்களால் அதிக நிதியிழக்கும் மாநிலங்கள் – தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
Tamil Nadu Cyber Fraud Cases : இந்தியாவில் கடந்த 3 நிதியாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சைபர் கிரைம் வழக்குகள் பதிவான மாநிலங்களில் அதிக நிதியிழப்பு ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தி் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது
நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 7வது இடத்திலும், அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதிக நிதியிழப்பு அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது தொடர்பான அறிக்கை பிரதமர் தலைமையில் நடைபெறும் பிரகதி கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
சைபர் கிரைம்களால் அதிக நிதியிழக்கும் மாநிலங்கள்
இந்தியாவில் கடந்த 3 நிதியாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சைபர் கிரைம் வழக்குகள் பதிவான மாநிலங்களில் அதிக நிதியிழப்பு ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தி் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. முதலிடத்தில் மேற்கு வங்கமும், அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், அதற்கு அடுத்த இடத்தில் டெல்லியும் இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஹரியானா மாநிலம் இடம் பெற்றுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் எழுத்துப்பூர்வ அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெர்றுள்ளன.
இதையும் படிக்க : ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!




நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மாதாந்தோறும் பிரகதி என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற சைபர் குற்றங்கள் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டன.
இதையும் படிக்க : 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!
இந்த நிலையில் தேசிய அளவில் அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்த ஆகஸ்ட் 2026 மாதம் நடைபெறும் பிரகதி கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலின் படி சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகராஷ்டிரா 3வது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் சைபர் குற்றங்களால் அதிகளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், கர்நாடகா 2வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3வது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.