காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொல்லை – பரபரப்பு தகவல்
Manamadurai Law Student Murder : மானாமதுரை அருகே காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை மற்றும் தம்பியால் சட்டக்கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் சட்டக்கல்லூரி மாணவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
சென்னை, ஆகஸ்ட் 22: மானாமதுரை அருகே காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்னப்புதுக்கோட்டையே சேர்ந்தவர் சிவபாலன். இவர் மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் உறவினர்கள் என கூறப்படுகிறது.
காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொல்லை
இந்த நிலையில் சிவபாலனின் பொருளாதார நிலையை காரணம் காட்டி பெண்ணின் தந்தை முருகேசன் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததிருக்கிறார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் பெண்ணின் தம்பி சிவபாலனை எச்சரித்திருக்கிறார்.
இதையும் படிக்க : திருவள்ளூரில் பரபரப்பு.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாய்ந்தது போக்சோ சட்டம்!
இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன், பெண்ணின் தம்பியை கொலை செய்ய சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பெண்ணின் தந்தை தனது உறவினர்களுடன் சென்று சிவபாலனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.




இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் தம்பி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல கடந்த சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தையூர் என்ற கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிய வந்த நிலையில் இருவரும் ஒரே சமுதாயமாக இருந்து பொருளாதார நிலை காரணமாக பெண்ணின் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : சதுரங்க வேட்டை பட பாணியில் நில மோசடி.. போலி ஆவணத்தால் ரூ.4 கோடிக்கு விற்பனை.. கம்பி எண்ணும் மூவர்!
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16, 2026 பிரவீன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக காரில் வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு சென்றது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பெண்ணின் தந்தை ஏழுமலை மற்றும் அவரது மகன் கெளதம் ஆகியோர் கூலிப்படையை ஏவி பிரவீனை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தான், ஏழுமலை, கௌதம் ஆகியோர் தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.