AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.30,000 நிவாரணம் – தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

EPS Seeks Paddy Crop Compensation : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். 2000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூ.30,000 நிவாரணம் – தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2026 17:45 PM IST

சென்னை, ஆகஸ்ட் 22 : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெற்பயிற்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

மேலும் அவரது பதிவில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். 2000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பயிர் சேதங்களை கணக்கெடுக்க பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்ளுக்கு வேளாண் அதிகாரிகளை அரசு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : சதுரங்க வேட்டை பட பாணியில் நில மோசடி.. போலி ஆவணத்தால் ரூ.4 கோடிக்கு விற்பனை.. கம்பி எண்ணும் மூவர்!

மேலும் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் மழை பாதிப்பை ஆய்வு செய்ய உடனடியாக அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

முன்னதாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக வேளாண் பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்திருக்கிறது. விவசாயிகள் எல்லாம் வேளாண் பட்ஜெட்டுக்காக பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.

கடந்த கால திமுக ஆட்சியில் வேளாண் பட்ஜெட் என்று அறிவிக்கப்பட்டு, 20 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்தார். வேளாண் அமைச்சர் சுமார் இரண்டரை மணிநேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அதில், முக்கியமாக எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க : மீண்டும் வரும் சென்னையின் ராயல் கெத்து.. டபுள் டெக்கர் பஸ் இந்த ரூட்லதான் ஓடப்போகுதா? MTC வெளியிட்ட மாஸ் அப்டேட்!

தேர்தல் நேரத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,500 தருவதாகவும், ஒரு டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4,500 தருவதாகவும் தெரிவித்திருந்தார்கள். சாகுபடியாளர் உரிம அட்டை மூலம், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 நேரடி முதலீட்டு உதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதுதொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்று பேசியிருந்தார். .

Follow Us