மதுரை சாலையோர வியாபாரியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் – அப்படி என்ன செய்தார்?
பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த சாலையோர வியாபாரியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். உங்களின் இந்த அனுபவமானது, மற்றவர்களையும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மதுரை, ஆகஸ்ட் 2 : பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த சாலையோர வியாபாரியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். மதுரை மேலச்சித்திரை வீதியில் சிறிய உணவுக் கடையை நடத்தி வருபவர் சுப.தேசியமணி. பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்று அவர் தனது கடையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரதமரின் திட்டத்ததால் தனது வாழ்க்கை மேம்பாடு அடைந்ததாக கூறி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுத்யிருந்தார்.
மதுரை சாலையோர வியாபாரி தேசிய மணியின் கடிதத்தை படித்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, இந்த திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் பணம் பெற்று, உங்கள் தொழிலை வலுப்படுத்த முடிந்தது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். கடனை முறையாக திருப்பி செலுத்தி, தொழிலை விரிவுபடுத்துவதற்காக இத்திட்டத்தை மீண்டும் பயன்படுத்திக் கொண்ட உங்களின் நேர்மை, கடின உழைப்பு மற்றும் மன உறுதியை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை சாலையோர வியாபாரியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்
மேலும், உங்கள் தொடர்ச்சியான வெற்றிக்கு எனது வாழ்த்துகள். சாலையோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு அதிகாரமளிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தினமும் கடினமாக உழைக்கும் மக்களுக்கு மரியாதையும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : சபரிமலை போறீங்களா? பக்தர்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை
நீண்ட காலமாக, சாலையோர வியாபாரிகளும் சிறு தொழில் செய்பவர்களும் வங்கி கடன் உதவிகளைப் பெறுவதில் சிரமப்பட்டு, பிற ஆதாரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றி இத்தகைய பயனாளிகளுக்கு நிறுவன அளவிலான நிதி உதவியை வழங்கும் நோக்கத்துடன் ‘பிரதமரின் ஸ்வநிதி’ திட்டம் தொடங்கப்பட்டது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
உரிய நேரத்தில் அரசின் மூலம் கிடைக்கும் ஆதரவு, எவ்வாறு உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை உங்களின் இந்த வெற்றிப் பயணமும், நம்பிக்கையும் நிரூபித்துள்ளது. உங்களின் இந்த அனுபவமானது, மற்றவர்களையும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற உத்வேகம் அளிக்கும். இத்தகைய கூட்டு முன்னேற்றம்தான், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை மேலும் வலுப்படுத்தும். உங்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி, வளம் மற்றும் நல் ஆரோக்கியம் கிடைக்க எனது வாழ்த்துகள்” என தனது கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.