AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை போற்றும் கந்தூரி விழா.. 4,000 பேருக்கு தடபுடல் விருந்து!

Kanthuri Festival Celebrated In Sivagangai | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெறும். அந்த வகையில், சிவகங்கையில் மிலாடி நபியை முன்னிட்டு கந்தூரி விழா நடைபெற்றது. இதில் 4,000 பேருந்து சிறப்பு உணவு வாளிகளில் வழங்கப்பட்டது.

சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை போற்றும் கந்தூரி விழா.. 4,000 பேருக்கு தடபுடல் விருந்து!
வாளிகளில் வழங்கப்பட்ட உணவு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Sep 2026 07:54 AM IST

சிவகங்கை, செப்டம்பர் 07 : சிவகங்கை (Sivagangai) மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், கரிசல்பட்டி முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஒவ்வொரு ஆண்டும், மிலாடி நபி பண்டிகையின்போது மதநல்லிணக்க கந்தூரி விழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, இந்த ஆண்டும் நேற்று (செப்டம்பர் 06, 2026) கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த கந்தூரி விழாவின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை போற்றும் கந்தூரி விழா

இந்த கந்தூரி விழாவின் தொடக்கமாக முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவல் ஜமாத் கமிட்டி சார்பில், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், நோய் இன்றி நலமுடன் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு துவா செய்யப்பட்டு இந்த கந்தூரி விழா தொடங்கப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அம்சமாக சுமார் 75 ஆடுகள் வெட்டப்பட்டு கறிக்குழம்பு தயார் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : முதல்வர் அலுவலக மாற்றத்துக்கான டெண்டரில் முரண்பட்ட தகவல் – என்ன நடந்தது?

வாளிகளில் வழங்கப்பட்ட நெய்ச்சோறு

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக அந்த ஊரில் உள்ள குடும்பங்களுக்கு வாளிகளில் நெய்ச்சோறு வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 1,000 கிலோ ஆட்டிறைச்சி, 800 கிலோ அரிசி, 100 கிலோ நெய், 3,000 முட்டைகள் என சுமார் 4,000 பேருந்து உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. சாதி, மத பேதமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் இந்த சிறப்பு உணவு பாகுபாடு பார்க்காமல் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு – தாயே குழந்தைகளை கொன்றது அம்பலம் – அதிர்ச்சி தகவல்

அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற அன்னதானம்

இந்த கந்தூரி விழா சிறப்பு உணவை கரிசல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனை தொடர்ந்து, அனைத்து சமூதாய மக்களும் பங்கேற்கும் அன்னதானமும் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய மத நல்லிணக்க விழாக்கம் நடைபெறும் நிலையில், சிவகங்கையில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க விழா வரவேற்பை பெற்றுள்ளது.

Follow Us