இன்று முதல் சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கும்!
Nigh Time Electric Train Service In Chennai | சென்னையில் இன்று (செப்டம்பர் 07, 2026) முதல் இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 07 : பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு (Beach – Tambaram – Chengalpattu) இடையே கடந்த 12 நாட்களாக இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பணி முடித்து தாமதமாக வீட்டிற்கு செல்லும் நபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமங்களை எதிர்க்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான், இன்று (செப்டம்பர் 07, 2026) முதல் இரவு நேர மின்சார ரயில் வழக்கம் போல இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.842 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 25, 2026 முதல் நேற்று (செப்டம்பர் 06, 2026) இரவு 11.15 மணி முதல் காலை 4.15 மணி வரை என சுமார் 5 மணி நேரம் கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இரண்டு மார்க்கமாகவும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க : சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி மீது வழக்குப்பதிவு
வழக்கம் போல இயக்கப்பட உள்ள மின்சார ரயில்கள்
இந்த நிலையில் தான், இன்று (செப்டம்பர் 07, 2026) முதல் கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள், இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் (செப்டம்பர் 06, 2026) நிறைவடைந்தது. எனவே, இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இன்று (செப்டம்பர் 07, 2026) வழக்கம் போல இயக்கப்படும்.
இதையும் படிங்க : கோவை அருகே மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பக்தர்கள் படுகாயம்
அடுத்தக்கட்டமாக ரயில் சேவை மாற்றங்கள் குறித்து புதிய ரயில்வே அறிவிப்புகள் வரும் வரை இதே நடைமுறை தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம், இனி இரவு நேர மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.