சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை எப்படி செயல்படும்.. ஐ.ஜி. பவானீஸ்வர் தெளிவான விளக்கம்!
IG Bhavaneeswari Explain Singapengal Special Task Force: தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த முழ விவரங்களை அந்தப் படையின் ஐ. ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் ஜோசப் விஜய் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படையின் ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிங்கப்பெண்கள் சிறப்புகள் அடிப்படை பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த படையில் 140 சப்-இன்ஸ்பெக்டர்கள், 420 காவலர்கள் உதவியுடன் 70 கள செயல்பாட்டு பிரிவுகளுடன் இயங்க தொடங்கும். மாநிலம் முழுவதும் 2,545 புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பணியில் சேர்க்கப்படும் காவலர்கள் காவல்துணை பிரிவுகள், நகர சரகங்களில் உள்ள 270 களப்பிரிவுகளை கண்காணிப்பார்கள். இதனை நிர்வகித்து தலைமைக்கு உதவுவதற்காக ஒரு எஸ். பி., 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பிரத்தியேக அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
ட்ரோன்கள், பாடி கேமரா உள்ளிட்ட வசதிகள்
இந்தப் படையில் உள்ள காவலர்களுக்கு ட்ரோன் மூலம் ரோந்து மேற்கொள்ளும் அமைப்புகள், கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட நேரலை ஒளிபரப்பு திறன் உடைய பாடி கேமராக்களுடன் செயல்படுத்தப்படும். முழுவதும் பெண்களைக் கொண்ட இந்த ரோந்து குழுக்களுக்கு 319 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 101 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் சீருடைகள் ஒரு பெண் சிங்கம் மற்றும் ஒரு பெண் காவலர் இடம் பெற்ற இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!




சிங்கப்பெண்கள் படை செயல்படும் விதம்
தனித்துவமான சீருடையாக காக்கி நிற பேண்ட் மற்றும் நீல நிற சட்டை மூலமாக சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள் அடையாளம் காணப்படுவர். இந்த படையானது பதற்றமான பகுதிகளை கண்காணிப்பது, பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்வது, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுதல், காவல் உதவி மொபைல் செயலி மூலம் வரும் அவசர அழைப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது, பள்ளி மற்றும் கல்லூரிகள், பணியிடங்களில் மக்களை சென்றடைந்து ஆலோசனை வழங்கும் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய முக்கிய பொறுப்புகளில் இந்த படை செயல்படும்.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் நடவடிக்கை
இந்த படையில் உள்ள காவலர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படும். பாலியல் துன்புறுத்தல், பெண்களை பின் தொடர்தல், பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது விரைவான மற்றும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி பவானீஸ்வரி தெரிவித்தார்.
மேலும் படிக்க: பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதல்வர் விஜய் விடுத்த கடும் எச்சரிக்கை!