AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் – காரணம் என்ன?

என்டிஏ கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேறியதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். பல்வேறு சவால்களைத் தாண்டி கூட்டணி வெற்றிக்காக பொறுப்புணர்ச்சியோடு தமாகா பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ்  – காரணம் என்ன?
ஜி.கே.வாசன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Jun 2026 16:42 PM IST

சென்னை, ஜூன் 14 : என்டிஏ கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேறியதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். பல்வேறு சவால்களைத் தாண்டி கூட்டணி வெற்றிக்காக பொறுப்புணர்ச்சியோடு தமாகா பணியாற்றியதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக சென்னையில் ஜூன் 14, 2026 இன்று செயதியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் தனது முடிவை அறிவித்தார்.

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ்

சென்னையில் ஜூன் 14, 2026 இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நலன் கருதி கூட்டணி தொடர்பாக முடிவடுக்கும் உரிமை ஜி.கே.வாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செயற்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. கட்சியில் இருந்து விலகினார் நடிகை கௌதமி.. இபிஎஸ்-க்கு கடிதம்!!

தமாக மாநில செயற்குழு கூட்டம்


இந்த நிலையில் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த கட்சி இன்று இணைந்திருக்கிறது. தேர்தலில் பல சவால்கள் இருந்தன. சவால்களைக் கடந்து கூட்டணி தர்மத்துக்காக கூட்டணியின் வெற்றிக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை தமாக தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பது கட்சியினரின் நிலைப்பாடு. மேலும் மீண்டும் தமிழ்நாட்டில் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது கூட்டணியில் இயக்கத்தின் வளர்ச்சி குறைவதாக கட்சியினர் கருதுகிறார்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் தேர்தல் இல்லாத நேரங்களில் கூட்டணி பொறுப்பில்லாமல் பொறுப்பாளர்கள் தனித்து செயல்பட வேண்டும். ஆனால் தற்போது தேசிய கூட்டணியோடு நட்பு கட்சியாகவே விளங்கும்.

இதையும் படிக்க : “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாஜக மற்றும் அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறிய போது தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடித்தது. கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 5 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட தமாக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us