புதிய கட்சி அறிவிப்பு? முக்கிய தகவலை வெளியிட்ட அண்ணாமலை
பிறந்த நாளான ஜூன் 4, 2026 இன்று அண்ணாமலை புதிய கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூன் 4 : பாஜகவில் தனக்கு பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் காரணமாக தனிக் கட்சி தொடங்கவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்த நிலையில் அதற்கேற்ப ஜூன் 3, 2026 நேற்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து தனது விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
இதற்கிடையில் பிறந்த நாளான ஜூன் 4, 2026 இன்று அண்ணாமலை புதிய கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஆதரவாளர்களிடம் தான் புதிய கட்சி தொடங்கவிருப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் அண்ணாமலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.




இதையும் படிக்க : “தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!
அண்ணாமலை முக்கிய அறிவிப்பு
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.https://t.co/CuLt12IkQwhttps://t.co/G6dY3wufzqhttps://t.co/rfti0J7ZsLhttps://t.co/xcD9EKje7B
— K.Annamalai (@annamalai_k) June 4, 2026
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 5, 2026 நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது புதிய கட்சிக்கான அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளத்த அவர், அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். இதுகுறித்து அவர் யாரிடமும் பேசவில்லை. எனக்கும் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றார்.
இதையும் படிக்க : அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் – நயினார் நாகேந்திரன்..
இதற்கிடையில் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் என் ஆருயிர் தம்பி அண்ணாமலைக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.