AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே?.. உதயநிதியின் சனாதன பேச்சும், அண்ணாமலையின் சரமாரி கேள்விகளும்!

Former BJP leader Annamalai : சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே?.. உதயநிதியின் சனாதன பேச்சும், அண்ணாமலையின் சரமாரி கேள்விகளும்!
உதயநிதிக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 15 May 2026 11:32 AM IST

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் மக்களை பிரிக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சனாதன தர்மமும், ஹிந்து மதமும் வேறு வேறு அல்ல என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசிய வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு தமிழகம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புளிச்சு போன இந்த விளக்கத்தை இன்னும் எத்தனை முறை திமுகவினர் சொல்வீர்கள். சனாதன தர்மம் மற்றும் ஹிந்து மதம் ஆகிய இரண்டும் வெவ்வேறு இல்லை என்று உங்க ஓனர் சொல்லி இருக்கிறார். இவர் தானே உங்க குரூப்பின் சித்தாந்த குருநாதர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்திற்கு சென்ற போது, இதுபோன்று சனாதன இந்து தர்மத்தை ஒழிக்கனும் என்று கூறி இருக்கலாமே.

நீங்க தான் ரொம்ப தில்லான ஆள் ஆச்சே

கூடவே, உங்க குருநாதரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே. நீங்கதான் ரொம்ப தில்லான ஆளாச்சே. ஏன் அப்போது வண்டியில இடமில்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. சட்டப்பேரவையில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி கூறி இருந்த நிலையில் இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழக சட்டப் பேரவையில் நான் பேசிய போது, மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி… அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் உத்தரவு!

அரசியல் விமர்சனத்துக்கு பயப்படும் ஆள் நான் இல்லை

இதுக்காக என்னை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. எதிர்ப்பிலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில் ஒரு சிறிய விளக்கத்தை மட்டும் அளிக்க விரும்புகிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் யாரும் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று அர்த்தம் இல்லை. கோவிலில் மட்டும் இல்ல, சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும். மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று மக்களை பிரிக்கிறதை தான் நான் ஒழிக்க வேண்டும் என்று கூறினேன்.

பெரியார் பேசிய கொள்கையை நான் கூறினேன்

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் பேசிய கொள்கையை தான் நானும் பேசினேன். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், சமத்துவமின்மை, ஒடுக்கு முறை ஆகியவற்றை கடுமையாக எதிர்ப்போம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: டிஜிபி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Follow Us