AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்.. 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை.. அதிரடியாக வங்கி கணக்கிற்கு வந்தாச்சு!

Kalaignar Magalir Urimai Tthogai : தமிழகத்தில் 1.31 கோடி மகளிர்களுக்கு மே மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்த தொகையானது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்.. 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை.. அதிரடியாக வங்கி கணக்கிற்கு வந்தாச்சு!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 15 May 2026 10:34 AM IST

தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1 கோடியே 31 லட்சம் மகளிர்களுக்கு மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 15- ஆம் தேதி ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இடையில், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்கூட்டியே ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2,000 ஆயிரம் என மொத்தம் ரூ.5,000 உரிமைத் தொகை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன் பின்னர், தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த மே 4- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், திராவிட முன்னேற்ற கழக அரசு தோல்வி அடைந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசு புதிதாக பதவி ஏற்றது.

மே மாதத்துக்கான உரிமை தொகை ரூ.1,000 வரவு வைப்பு

இதன் காரணமாக, தமிழகத்தில் மே மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகை 15- ஆம் தேதி வழங்கப்படுமா என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வந்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ( மே 15- ஆம் தேதி) தமிழகத்தில் பயன் அடைந்து வரும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: நாட்டின் பிரதமர் விஜய்… தமிழகத்தின் முதல்வர் அஜித் குமார்.. ரக்கி ராதன் பண்டிட் கணிப்பால் அதிரும் அரசியல் களம்!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பெயரில்

இந்த உரிமை தொகையானது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் புதிதாக ஆட்சி அமைத்துள்ளதால், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்த திட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

தவெக வாக்குறுதியின் படி ரூ.2,500 உரிமைத் தொகை

இதன் காரணமாக, பழைய திட்டத்தின் பெயரில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த உடன் வரும் காலங்களில் தமிழக வெற்றிக்கழக அரசு வாக்குறுதி அளித்தபடி மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க: “திமுகவில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்போகிறேன்”.. மு.க.ஸ்டாலினின் புதிய முன்னெடுப்பு!!

Follow Us