அதிமுகவில் அதிரடி மாற்றம்.. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி காலி… எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்சன்!
Sp Velumani And CV Shanmugam : தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அதிமுகவில் எஸ். பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து இருந்த நிலையில், எடப்பாடி மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் இரு அணிகளாக பிரிந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் டெபாசிட் இழந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என சிவி சண்முகம் தரப்பு பெரும் குற்றசாட்டை முன் வைத்தது. இதன் காரணமாக, எஸ் பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் இன்று தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: அதிமுக துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரான நத்தம் ஆர். விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வேலுமணி, அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சிவி சண்முகம்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ்
அமைப்பு செயலாளரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான காமராஜ், அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான சி. விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளரான பி. தங்கமணி, அமைப்பு செயலாளர், தர்மபுரி மாவட்ட செயலாளர் கே. பி. அன்பழகன், அமைப்பு செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பெஞ்சமின், அமைப்பு செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.




மேலும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர்
இதே போல, அமைப்பு செயலாளரும், தேனி மேற்கு மாவட்ட செயலாளருமான ஜக்கையன், அமைப்பு செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளருமான இசக்கி சுப்பையா, கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம். சி. சம்பத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே. சி. வீரமணி, கரூர் மாவட்ட செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர், ஈரோடு மாநகர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு pic.twitter.com/YWx1Vfnkzc
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 13, 2026
திருச்சி – ராணிப்பேட்டை மாவட்ட செயலர்கள்
இதே போல, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் அப்பச்சி வினோத், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் அந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நீட் தேர்வை ரத்து செய்க – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்