AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் தேர்வை ரத்து செய்க – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்

CM Vijay Urges Centre to Cancel NEET : நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

நீட் தேர்வை ரத்து செய்க – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 May 2026 19:31 PM IST

சென்னை, மே 12 : கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.  நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்க

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு கடந்த மே 3, 2026 அன்று தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மே 3, 2026 அன்று  நடைபெற்ற தேர்வில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தேர்வு எழுதிய மாணவர்களிடையே பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : அதிரடிக்கு பெயர்போன அஸ்ராக் கார்க்.. தமிழக உளவுத்துறை ஐ.ஜி-ஆக நியமனம்!

இந்த நிலையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த அனுமதிக்குமாறும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டன.  இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட்தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிமுகவை பிளவுபடுத்தி உடைக்கும் எண்ணம் இல்லை… எஸ்.பி.வேலுமணி விளக்கம்

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. எனவே, தமிழ் நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், மருத்துவ படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

Follow Us