AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!

தனது உரையில் பாமக-வின் முக்கிய கோரிக்கைகளை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 80% முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை மற்றும் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க வேண்டும்.

“மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!
செளமியா அன்புமணி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 May 2026 14:12 PM IST

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பாமக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி கலந்துகொண்டு உரையாற்றினார். மது ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதை சௌமியா அன்புமணி மனமாரப் பாராட்டினார். குறிப்பாக, தனது தர்மபுரி தொகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த 3 மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..

மதுக்கடையை மூடினால் 4, 5 சந்து கடைகள்:

இருப்பினும், “ஒரு மதுக்கடையை மூடினால், அதற்குப் பக்கத்திலேயே 4 அல்லது 5 ‘சந்து கடைகள்’ திறக்கப்படுகின்றன. இது தமிழகம் முழுவதும் நடக்கிறது; இதை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்” என்று அவர் எச்சரித்தார். மது ஒழிப்பு என்பது ஒரு தொடர் முயற்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சிங்கப்பெண்” பிரிவுக்குப் பாராட்டு:

பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், போதை மற்றும் மது பழக்கத்தால் இன்று பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை உள்ளதாகக் குறிப்பிட்டார். டாஸ்மாக் கடைகளைக் கடக்கும்போது பெண்கள் பயந்து தலைகுனிந்து செல்லும் அவல நிலை மாற வேண்டும் என்றார். பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் அறிவித்துள்ள “சிங்கப்பெண்” என்ற தனிப் பிரிவை அவர் வரவேற்றார். மேலும், இதற்கெனத் தனியாக ஒரு டிஜிபி தலைமையில் குழு அமைத்தால், அது பெண்கள் பாதுகாப்பிற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்ற ஆலோசனையை வழங்கினார்.

பாமக-வின் கொள்கைகளும் கோரிக்கைகளும்:

தனது உரையில் பாமக-வின் முக்கிய கோரிக்கைகளை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 80% முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை மற்றும் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக-வின் நிலைப்பாடு:

தமிழக அரசின் சில கொள்கைகள் பாமக-வின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.

குறிப்பெடுத்த முதல்வர் விஜய்:

சௌமியா அன்புமணி மிக ஆவேசமாகவும் தரவுகளோடும் இந்தப் புகாரைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, அவையில் இருந்த தமிழக முதல்வர் விஜய் அதனை மிகுந்த கவனத்துடன் செவிமடுத்தார். சௌமியா அன்புமணி குறிப்பிட்ட ‘ஒரு கடைக்கு நான்கு சந்து கடைகள்’ என்ற விவகாரத்தை முதல்வர் தனது டைரியில் மிக முக்கியக் குறிப்பாக எடுத்துக்கொண்டார்.

இதையும் படிக்க: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..

Follow Us