அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
Stay on Order Blocking X Accounts : அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 எக்ஸ் பக்கங்களை 3 மணி நேரத்தில் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை, மே 13 : அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முடக்கத்தை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் 18 சமூக வலைதள பக்கங்களின் முடக்கத்தை நீக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 8, 2026 அன்று தள்ளிவைத்தனர்.
அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு மே 13, 2026 அன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மயை நிரூபித்தது. இந்த நிலையில் அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 எக்ஸ் பக்கங்களை 3 மணி நேரத்தில் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதையும் படிக்க : “மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!




மேலும் அப்படி முடக்கவில்லை என்றால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதில் சில பிரபல அரசியல் விமர்சகர்கள் பக்கங்களும் அடக்கம். இது அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்கும் சர்வதிகார செயல் என அவர்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
இந்த நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் கணக்குகளை முடக்கும் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையின் உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தன. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக பதிவிடும் கணக்குகளை மட்டும் குறி வைத்து முடக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் சைபர் கிரைம் காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் வருகிற ஜூன் 8, 2026 இந்த வழக்கு விசா78247ரணைக்கு வரும் எனவும் தமிழக அரசும் காவல்துறையும் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : “அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!
விஜய் தலைமையிலான தவெக அரசு மே 13, 2026 அன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. மேலும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுகவினர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி.சண்முகம் தரப்பும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மேலும் இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.