AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் – விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?

இதனிடயே, எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரும் செய்கையில் பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கரை அருகே அழைத்த சி.வி.சண்முகம், அவரது காதில் முனுமுனுத்தார். தொடர்ந்து, விஜய்பாஸ்கர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததும், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் இருக்கைக்கு எழுந்துச்சென்று பேசினார். அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.

குதிரைப்பேரம் குறித்து பேசிய இபிஎஸ்.. பின்னால் கிசுகிசுத்துகொண்ட சண்முகம் – விஜயபாஸ்கர்.. என்ன நடக்குது அதிமுகவில்?
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 May 2026 12:05 PM IST

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. குறிப்பாக, சட்டமன்ற மரபுகள் மீறப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், காலம் காலமாகப் பின்பற்றி வரும் மரபுகளைத் தற்போதைய பேரவைத் தலைவர் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தீர்மானங்களை வழிமொழிவதிலும், உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் பாரபட்சம் காட்டக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?

குதிரை பேரத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டாம்:

தங்களது கட்சியில் நிலவும் சில உட்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சி ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிப்பது முறையாகாது என இபிஎஸ் சுட்டிக்காட்டினார். இது “குதிரை பேரத்திற்கு” வழிவகுத்துவிடும் என்றும், தூய்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் இதற்கு இடம் தரக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அதிமுக உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி இழுக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சாதனைகளை வரிசைப்படுத்திய இபிஎஸ்:

தொடர்ந்து, பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது . குடிமராமத்துத் திட்டம், மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது மற்றும் காவேரி நதிப் பிரச்சனையில் விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியது. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது என்றார்.

தீர்மானத்திற்கு எதிர்ப்பு:

முடிவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மக்களுக்காகச் சேவை செய்யும் இயக்கம். எங்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி என்பது எதிரி கட்சி அல்ல, எதிர்கட்சி என்ற நிலைப்பாட்டில்தான் செயல்படுவோம்” என்று கூறினார். இருப்பினும், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களிப்போம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

காதில் முனுமுனுத்த சி.வி.சண்முகம்:

இதனிடயே, எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போது, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரும் செய்கையில் பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கரை அருகே அழைத்த சி.வி.சண்முகம், அவரது காதில் முனுமுனுத்தார். தொடர்ந்து, விஜய்பாஸ்கர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததும், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் இருக்கைக்கு எழுந்துச்சென்று பேசினார். அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர்கள் விவாதித்தாக தெரிகிறது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் ஜோதிடம், மாந்திரீகம்.. விசிக சொன்ன அந்த பாய்ண்ட்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!

அவையில் பரபரப்பு:

இபிஎஸ் பேசி முடித்த பிறகு, அதிமுக உறுப்பினர்களுக்குள்ளேயே வாய்ப்பு வழங்குவதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எஸ்.பி. வேலுமணி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்றார். யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது பேரவைத் தலைவரின் உரிமை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த விவாதங்களால் சட்டமன்றத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.

Follow Us