தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?
இதனால், தேர்தலில் கடுமையாக எதிர்த்த திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடமே ஆதரவு கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளித்தாலும், மீதமுள்ள 2 உறுப்பினர்களின் ஆதரவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து பெறுவது தவெகவிற்குப் பெரும் சவாலாக அமைந்தது.
தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஒரு தொங்கு சட்டசபை உருவானது. இந்தச் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அக்கட்சியின் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் தவெகவின் பலம் 107 ஆகக் குறைந்தது. ஆட்சி அமைப்பதற்கான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் தவெக பெரும் சிரமத்திற்குள்ளானது.
இதையும் படிக்க : தவெக அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.. உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ மேல்முறையீடு!
திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி:
இதனால், தேர்தலில் கடுமையாக எதிர்த்த திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடமே ஆதரவு கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளித்தாலும், மீதமுள்ள 2 உறுப்பினர்களின் ஆதரவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து பெறுவது தவெகவிற்குப் பெரும் சவாலாக அமைந்தது. இறுதியில், பல இழுபறிகளுக்குப் பிறகு மே 9-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அஷ்டமி நாளான மே 10-ஆம் தேதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு:
விஜய் தரப்பில் அமைச்சர் பதவி வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும், காங்கிரஸ் மட்டுமே அதற்கு உடன்பட்டது. ஆனால் கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் தாங்கள் அடிப்படையில் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்றும், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வருவதைத் தவிர்க்கவே தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதாவது, தாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும், தவெகவுக்கு ஆதரவு மட்டும் தருவதாகவும் கூறினர்.
அதிமுகவின் ஆதரவும் நிபந்தனைகளும்:
திமுக கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பது கடினம் என்பதை உணர்ந்த முதலமைச்சர் விஜய், ஆரம்பத்தில் தான் கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றி, அதிமுகவின் ஆதரவைப் பெறச் சம்மதித்தார். இதைத்தொடர்ந்து, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அணியினர் தவெகவிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்த ஆதரவிற்குப் பின்னால் அதிமுக தரப்பு சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதிமுக தரப்பிலிருந்து குறைந்தது 8 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும். சில அரசு வாரியங்களின் தலைவர் பதவிகளையும் அவர்கள் கோரியுள்ளனர். இக்கூட்டணி உறுதியானதை அடுத்து, முதலமைச்சர் விஜய் நேற்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேலுமணி மற்றும் அவர்களது ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 26 பேரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க : மக்களுக்கு இடையூறு – தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை
அமைச்சர்களாகும் வாய்ப்பு:
தவெக இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. அதன்படி, தவெக தரப்பிலும் 5 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட சம்மதம் தெரிவிகப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அமைந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் இன்றி விஜய் ஆட்சி செய்வதற்குத் தாங்கள் உறுதுணையாக இருப்போம் என அதிமுகவினர் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.