தமிழ்நாட்டில் ஜோதிடம், மாந்திரீகம்.. விசிக சொன்ன அந்த பாய்ண்ட்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!
புதிய ஆட்சி அமைந்தால் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தாம் பாதுகாக்க படுவோம் என நம்பி வாக்களித்துள்ளனர். நேற்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என கேட்டுகொண்டார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு ‘தொங்கு சட்டசபை’ உருவானது. இருப்பினும், அதிக இடங்களைப் பெற்ற தவெக, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அளித்த காலக்கெடுவின்படி, (மே 13) இன்று சட்டமன்றத்தில் தவெக தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான இந்த அரசுக்கு 118க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தவெகவிற்கு விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க : தவெக அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.. உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ மேல்முறையீடு!
தவெகவுக்கு விசிக ஆதரவு:
அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, விசிக சார்பில் பேசிய வன்னி அரசு தங்களது ஆதரவை தெரிவித்தார். ஆளுநர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து, மாநில உரிமைகளை பாதுகாப்பதில் சமரசம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு:
புதிய ஆட்சி அமைந்தால் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தாம் பாதுகாக்க படுவோம் என நம்பி வாக்களித்துள்ளனர். நேற்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என கேட்டுகொண்டார்.
மூட நம்பிக்கைகளுக்கு இடம் தரக்கூடாது:
தொடர்ந்து, பேசிய அவர் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கைகள் மூலம் ஏமாற்றுவோருக்கு சிறை தண்டனை அளிக்கும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மாந்திரீகம், சூனியம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜோதிடம், பல்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல் அறிவியலை வளர்க்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க: தவெகவுக்கு ஆதரவு.. அதிமுகவுக்கு 8 அமைச்சர் பதவிகள் நிபந்தனை?.. லிஸ்டில் யார் யார்?
திமுகவின் திட்டங்கள் தொடர வேண்டும்:
தொடர்ந்து, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அதேபோல், இந்த ஆட்சியிலும் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அதோடு, திமுக அரசு கொண்டு வந்த காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன், தமிழ்புதல்வன் திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என்றும் விசிக தரப்பில் கோரிக்கை வைத்தார்.