AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்துக்கு திமுக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்
உச்சநீதிமன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Aug 2026 19:10 PM IST

சென்னை, ஆகஸ்ட் 1 : தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்துக்கு திமுக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீரை உடனடியாக திறக்க உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு

திமுக விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!

மேலும் திமுகவின் மனுவில் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உறுதி சய்ய வேண்டும்.

மேலும் கடந்த ஜூலை 29, 2026 அன்று முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். கடந்த ஜூலை 26ஸ 2026 நிலவரப்படி, விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டிஎம்சி நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

இதையும் படிக்க : 200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 4 மடங்கு மின் கட்டணமா? தவெக அரசுக்கு எதிராக சீறிய சீமான்!

இந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தில் வருகிற ஆகஸ்ட் 3, 2026 திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விருக்கிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ப்ட பிறகு எதற்கு அனைத்து கட்சிக் கூட்டம்? என கேள்வி எழுப்பினார்.

Follow Us