வெற்றி, தோல்வி சகஜம், பதவிக்காக செல்லவில்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்
சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏகள் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதில் சி.வி.சண்முகம் மட்டு்ம் பங்கேற்கவில்லை என்பது பேசு பொருளானது. இந்த நிலையில் இது குறித்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கிவிட்டதாக விளக்கமளித்தார்.
சென்னை, மே 27 : தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு தரப்பினரும், எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் ஒரு தரப்பினரும் என இரு தரப்பினர்களாக பிரிந்திருந்தனர். அதில் சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 5 எம்எல்ஏகள் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் தான் அதிமுக எம்எல்ஏகள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
பதவிக்காக செல்லவில்லை என எஸ்.பி.வேலுமணி விளக்கம்
மற்றொரு பக்கம் எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்எல்ஏகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் உள்ள 16 எம்எல்ஏகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப மே 27, 2026 அன்று காலை சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏகள் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதில் சி.வி.சண்முகம் மட்டும் பங்கேற்கவில்லை என்பது பேசு பொருளானது.




இதையும் படிக்க : மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை
இதற்கிடையில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அணைந்தும் நீங்கிவிட்டன. எங்கள் தரப்பு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்றார்.
எஸ்.பி.வேலுமணி பேட்டி
Chennai | AIADMK leader SP Velumani says, “After the election, we expressed certain views and took some decisions that were seen as being supportive of the ruling party. They had submitted a petition seeking the disqualification of our 25 members. Likewise, we had also submitted… pic.twitter.com/pr0kLfD5o9
— ANI (@ANI) May 27, 2026
மேலும் பேசிய அவரிடம் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சி.வி.சண்முகம் அண்ணன் எங்களோடு தான் இருக்கிறார். கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டது. வெற்றி, தோல்வி சகஜம் தான். தோல்வி குறித்து ஆராய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளோம். இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட தகுதிநீக்க மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்றார்.
இதையும் படிக்க : அதிமுக இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி.. கோரிக்கைகளை ஏற்க மறுத்து இபிஎஸ் பிடிவாதம்!!
இது குறித்து பதிலளித்த சட்டமன்ற தலைவர் ஜே.சி.டி பிரபாகர், தகுதி நீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளனர். அவற்றை ஆராய்ந்து மே 28, 2026 நாளை காலை எனது முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக அதிமுகவில் நீடித்து வந்த பரபரப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது என்றார்.