AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை

கடந்த இரண்டு நாட்களாக சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும், ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 May 2026 11:39 AM IST

மே 27, 2026: அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், இரண்டு அணிகளும் மீண்டும் ஒன்றிணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு வெறும் 47 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு தரப்பினர் பிரிந்து சென்றனர். மேலும், அவர்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர். இது அதிமுகவினரிடையே ஏற்பட்ட பிளவை வெளிப்படையாக காட்டியது.

இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக:

தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக, எஸ்.பி. வேலுமணி தரப்பிலும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சூழலில், இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் வழங்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. அதிமுகவுக்கு இடம் ஒதுக்கப்படாததால், சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “திமுகவினரின் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது”.. விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

இரண்டு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை:

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு நாட்களாக சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும், ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனால், தற்போது சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அணியின் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இரண்டு அணிகளும் மீண்டும் இணைந்து செயல்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விரைவில் ஒன்றிணையும் அதிமுக:

அப்படி ஒன்றிணையும் பட்சத்தில், பறிக்கப்பட்ட கட்சி பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என சி.வி. சண்முகம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுப்பார், இரண்டு அணிகளும் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், அதிமுக அணிகள் விரைவில் ஒன்றிணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us