தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக அமைத்த கள ஆய்வு குழுவில் இடம் பெற்றவர்கள் யார்.. யார்.. முழு விவரம் உள்ளே!
DMK Field Study Team: தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைந்த நிலையில், அந்த தோல்விக்கான காரணத்தை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கள ஆய்வு குழுவில் யார்.. யார்.. இடம் பெற்றுள்ளனர் என்பது தொடர்பான விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கட்சியின் தலைவரான மு. க. ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியை தழுவி இருந்தார். அந்த நிலையில், திமுக தோல்வி அடைந்தது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று 36 பேர் கொண்ட ஒரு குழுவை மு. க. ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவானது தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட செயலாளர்கள், திமுகவின் வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிற ஜூன் 5- ஆம் தேதிக்குள் ஸ்டாலினிடம் அறிக்கையே சமர்ப்பிக்க உள்ளனர். இந்த குழுவில், மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: திருப்பத்தூரில் நாய்க்கான உணவு சாப்பிட்டதால் சோகம்… சிறுமி மரணம்….!




ஈரோடு மாவட்டம் முதல் திருவண்ணாமலை வரை
- ஈரோடு, நாமக்கல்- சி. வி. எம். பி. எழிலரசன், மன்னை சோழராஜன்.
- நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை- பூச்சி முருகன், ஜெகன், பெரியசாமி.
- சேலம்- வழக்கறிஞர் சரவணன், இளையராஜா.
- ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி- முரசொலி எம்பி, சேலம் உமாராணி.
- சென்னை வடக்கு, திருவள்ளூர் – அப்துல்லா, ரேகா பிரியதர்ஷினி.
- சென்னை மேற்கு, சென்னை கிழக்கு- எஸ்கேபி. கருணா, பிரகாஷ் எம் பி.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி கிழக்கு- சி. என். அண்ணாதுரை எம்பி, ரத்னா லோகேஸ்வரன்.
- தர்மபுரி மேற்கு, திருவண்ணாமலை- ஜி. செல்வம் எம் பி, முத்துவேல் ராமசாமி.
அரியலூர் முதல் கோயம்புத்தூர் வரை
- அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி- கிரிராஜன் எம் பி, அப்துல் மாலிக்.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி- சுபா. சந்திரசேகர், டாக்டர் யாழினி.
- கரூர், திருச்சி வடக்கு, திண்டுக்கல், புதுக்கோட்டை வடக்கு- டாக்டர் கோகுல், இன்பா ஏ. என். ரகு.
- புதுக்கோட்டை தெற்கு, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை மாநகர்- எஸ். ஜோயல், டாக்டர் எ.வ. வே. கம்பன்.
- திருப்பூர், நீலகிரி- தாயகம் கவி, மருது கணேஷ்.
- ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்- கான்ஸ்டன்டைன், பரந்தாமன், ரவீந்திரன் எம். பி.
- திண்டுக்கல், கோயம்புத்தூர்- பரிதி இளம் சுருதி, ஜி.பி. ராஜா.
விழுப்புரம் முதல் காஞ்சிபுரம் தெற்கு வரை
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி- வழக்கறிஞர் ரவீந்திரன், வீரமணி ( மாணவர் அணி).
- மதுரை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விருதுநகர் தெற்கு, தேனி, விருதுநகர் வடக்கு- டாக்டர் அஞ்சுகம் பூபதி, பிரபு சுலேந்திரன்.
- காஞ்சிபுரம் வடக்கு, சென்னை தென்மேற்கு, காஞ்சிபுரம் தெற்கு- ஹெலன் டேவிட்சன், இளமகிழன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மு.க ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி? தூத்துக்குடி திமுகவினர் தீர்மானம்