AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களை நிற்க வைக்கக்கூடாது.. அமரவைத்து தான் பேச வேண்டும்.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!!

பொதுமக்களை நிற்க வைத்துக்கொண்டு பதிவுத்துறை அலுவலர்கள் பதிலளிக்கக் கூடாது. இது போன்ற உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில் உள்ள பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும், பொதுமக்களை நிற்க வைத்தே அதிகாரிகள் நடத்துவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன.

மக்களை நிற்க வைக்கக்கூடாது.. அமரவைத்து தான் பேச வேண்டும்.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 May 2026 13:31 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் வரும் பொதுமக்களை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் நிற்க வைத்துக் கொண்டு பதிலளிக்கக் கூடாது என்றும், அவர்களை நாற்காலியில் அமரவைத்துத்தான் பேச வேண்டும் என்றும் பதிவுத்துறைத் தலைவர் அதிரடியான புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை மூலமாக ஆவணப் பதிவுகள், சொத்துப் பரிமாற்றங்கள் மட்டுமன்றி, திருமணப் பதிவு போன்ற பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 587 சார்பதிவாளர் அலுவலகங்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இதையும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..

அரசின் புதிய விதிமுறைகள்:

அவ்வாறு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து அங்கிருக்கும் சார்பதிவாளரிடமோ அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களிடமோ நேரில் தெரிவித்துத் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். பொதுமக்களின் வசதியையும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையையும் உறுதி செய்யும் வகையில் இந்தச் சுற்றறிக்கையில் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கணிசமான இருக்கைகள் கட்டாயம்:

சார்பதிவாளரின் மேசைக்கு எதிரிலும், அதேபோல அலுவலக உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களின் மேசைகளுக்கு முன்பாகவும் கணிசமான அளவில் நாற்காலிகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர் மற்றும் பணியாளரின் இருக்கைக்கு முன்பாகவும் குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும். அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை அந்த நாற்காலிகளில் அமரவைத்து மட்டும்தான் அதிகாரிகள் பேச வேண்டும். எந்தவொரு சூழலிலும் பொதுமக்களை நிற்க வைத்துக்கொண்டு பதிவுத்துறை அலுவலர்கள் பதிலளிக்கக் கூடாது.

தொடர் புகார்களின் எதிரொலி:

இது போன்ற உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில் உள்ள பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும், பொதுமக்களை நிற்க வைத்தே அதிகாரிகள் நடத்துவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன.

இதன் அடிப்படையிலேயே தற்போது இந்த அதிரடிச் சுற்றறிக்கை மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் அமருவதற்குப் போதுமான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், அவை முறையாகப் பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் அந்தந்த மாவட்டப் பதிவாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிசிடிவி மூலம் தீவிரக் கண்காணிப்பு:

அலுவலகங்களில் பொதுமக்களுக்கான இருக்கை வசதிகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா, அது கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது வெறும் ஆய்வுகளோடு மட்டுமன்றி, அலுவலகங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த திடீர் ஆய்வுகளை மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள் நேரடியாகத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் மிகத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கோட்டையில் ‘புதிதாக’ நடக்கும் மாற்றங்கள்.. கமிஷன், கட்டிங் சிஸ்டமிற்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

Follow Us