AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அமைச்சரவை விரிவாக்கம்.. அதிமுக விவகாரம்.. சென்னை வந்தடைந்த தமிழக ஆளுநர்..

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆளுநர் மாளிகையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவு செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அமைச்சரவை விரிவாக்கம்.. அதிமுக விவகாரம்.. சென்னை வந்தடைந்த தமிழக ஆளுநர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 May 2026 09:06 AM IST

சென்னை, மே 16, 2026: தமிழக ஆளுநர் ஆர்.வி அர்லேகர் நேற்று சென்னை திரும்பினார். இன்று மட்டும் சென்னையில் தங்கியுள்ள அவர், இன்று இரவே மீண்டும் கேரளாவுக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் வருகிற மே 18ஆம் தேதி புதிய முதலமைச்சராக வி.டி சதீசன் பதவியேற்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக அவர் கேரளா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆளுநர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு “குதிரைப் பேரத்தில்” ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வரும் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!

அதிமுகவில் நிலவும் உட்கட்சி விவகாரம்:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. சி.வி சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இந்த நீக்கம் செல்லாது என சி.வி சண்முகம்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: தவெக அரசு அமைந்து 7 நாட்கள்.. ஒதுக்கப்படாத இலாகாக்கள்.. கோட்டையில் தேங்கும் முக்கிய கோப்புகள்!!

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆளுநர் மாளிகையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவு செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அமைச்சரவை விரிவாக்கம்:

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாததும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. குறிப்பாக, கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் சென்னை வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சரவை அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனும் அவர் ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us