AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!

இந்த வெள்ளைத் துணி நடைமுறை, காலனித்துவ ஆட்சி காலத்தில் தொடங்கியது என கூறப்படுகிறது. அப்போது அலுவலகங்களில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தால், வியர்வையை உறிஞ்சவும், நாற்காலிகளை பாதுகாக்கவும் வெள்ளை பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அது சுத்தம் மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக மாறியது. ஆனால், காலப்போக்கில் அது விஐபி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்பட்டது.

வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 May 2026 12:54 PM IST

மே 16, 2026: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக அவரது நேர்த்தி, நிர்வாக முறை மற்றும் எளிமையான செயல்பாடுகள் அரசு அதிகாரிகளிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. முதல்வர் விஜய் தினமும் காலை சரியாக 9.30 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு வருவதாகவும், மாலை 5 மணிவரை அங்கேயே இருந்து பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், காலையில் வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்துக் கொண்டு வந்து, அரசு அதிகாரிகளைப் போல தனது அலுவலக அறையிலேயே அமர்ந்து சாப்பிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைத்துறையில் தனது நேர மேலாண்மைக்காக அறியப்பட்ட விஜய், தற்போது அரசியல் மற்றும் நிர்வாகத்திலும் அதையே கடைப்பிடித்து வருகிறார். அவரது இந்த ஒழுங்குமுறை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை துண்டு கலாச்சாரத்தை கைவிட்ட முதல்வர் விஜய்:

இந்த நிலையில், விஐபி கலாச்சாரமாக கருதப்படும் மற்றொரு பழக்கத்தையும் முதல்வர் விஜய் கைவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அதாவது, முதலமைச்சர் அமரும் நாற்காலியில் வெள்ளைத் துணி போடும் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த மாற்றம் கவனிக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை ஆய்வுக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட புகைப்படங்களில், முதலமைச்சரின் நாற்காலியில் வெள்ளைத் துணி காணப்பட்டது. ஆனால், மறுநாள் மல்லிகா ஸ்ரீனிவாசன் மற்றும் லக்‌ஷ்மி மேனன் ஆகியோரை சந்தித்தபோது வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அந்த வெள்ளைத் துணி இடம்பெறவில்லை.

மேலும் படிக்க: புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..

இது தொடர்பாக முதலமைச்சர் அல்லது தமிழக அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் பலர் இதை ‘விஐபி கலாச்சாரத்திற்கு எதிரான முன்னேற்றமான நடவடிக்கை’ என பாராட்டி வருகின்றனர்.

சுற்றுசூழல் ஆர்வலரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்:

இந்த விவகாரம், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் வெளியிட்ட கோரிக்கைக்குப் பிறகு அதிக கவனம் பெற்றது. அவர் தனது சமூக வலைதள பதிவில், “வெள்ளைத் துணி கலாச்சாரம் அதிகார வர்க்க மனப்பான்மையை உருவாக்குகிறது; இதற்கு முடிவு கட்ட வேண்டும்” என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளைத் துணி அகற்றப்பட்டதை குறிப்பிட்டு, “சாதாரண மக்களின் குரலை நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது” என்று லிசிப்ரியா கங்குஜம் நன்றி தெரிவித்தார்.

எப்படி வந்தது இந்த வெள்ளை துணி கலாச்சாரம்?

இந்த வெள்ளைத் துணி நடைமுறை, காலனித்துவ ஆட்சி காலத்தில் தொடங்கியது என கூறப்படுகிறது. அப்போது அலுவலகங்களில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தால், வியர்வையை உறிஞ்சவும், நாற்காலிகளை பாதுகாக்கவும் வெள்ளை பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அது சுத்தம் மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக மாறியது. ஆனால், காலப்போக்கில் அது விஐபி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்பட்டது.

Follow Us