AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..

Kodaikanal Berijam Lake: மலை மற்றும் வனப்பகுதி என்பதனால், அங்கு அடிக்கடி சிறுத்தைகள், புலிகள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கமாகும். இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சுற்றுலாத் தளங்கள் அவ்வப்போது மூடப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 16 May 2026 10:56 AM IST

மே 16, 2026: கொடைக்கானலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்பட்டதால், அந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மலைகளின் இளவரசியென அழைக்கப்படும் கொடைக்கானல் பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறை காரணமாகவும், குளிர்ச்சியான வானிலையை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அங்கு செல்கின்றனர்.

கொடைக்கானல் பகுதியில் குணா குகைகள், பிரையன்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றாக பேரிஜம் வனப்பகுதி விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் இயற்கை எழில் மிகுந்த சூழல் காரணமாக, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று வருகின்றனர்.

மேலும் படிக்க: தவெக அமைச்சரவை விரிவாக்கம்.. அதிமுக விவகாரம்.. சென்னை வந்தடைந்த தமிழக ஆளுநர்..

பேரிஜம் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை:

இந்த நிலையில், நேற்று பேரிஜம் வனப்பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட புலிகள் சாலைகளில் சுற்றித்திரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

அதேபோல் மதிக்கெட்டான் சோலை, தொப்பித்தூக்கி பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த பகுதிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..

மலை மற்றும் வனப்பகுதி என்பதனால், அங்கு அடிக்கடி சிறுத்தைகள், புலிகள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கமாகும். இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சுற்றுலாத் தளங்கள் அவ்வப்போது மூடப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow Us