முதல்வர் விஜய் திருச்சி வருகை – ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மே 31, 2026 நாளை திருச்சிக்கு வரவுள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
திருச்சி, மே 31 : திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மே 31, 2026 நாளை திருச்சிக்கு வரவுள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஜய் மே 31, 2026 அன்று திருச்சி வரவிருக்கிறார்.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதல்வர் விஜய் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார்.இந்த நிகழ்ச்சி திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் மே 31, 2026 மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது.




இதையும் படிக்க : திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம் – நிவாரண நிதி அறிவித்த முதல்வர்
முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | Preparations underway at the site where the CM Vijay’s rally is being organised on June 1.
This is his first visit to Tiruchirappalli after becoming the CM of the state. pic.twitter.com/rtQreHPgUV
— ANI (@ANI) May 31, 2026
முதல்வர் விஜய் திருச்சிக்கு வரவுள்ள நிலையில் நாளை ஜூன் 1, 2026 அன்று காலை 10 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி மாநகர பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மரக்கடை வழிய மெயின் கார்டு கேட் காந்தி சிலை அருகே பயணிகளை இறக்கி விட்டு அரண்சாலை வழி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்… – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சியில் நாளை ஜூன் 1, 2026 அன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வளவனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர் அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் வளாகம் வரை ரோடு ஷோ மேற்கொள்ளவிருக்கிறார்.