திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம் – நிவாரண நிதி அறிவித்த முதல்வர்
CM Joseph Vijay : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நெஞ்சு எலும்பு உடைந்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் விஜய் ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
நாமக்கல், மே 31 : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நெஞ்சு எலும்பு உடைந்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு மே 31, 2026 இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தனாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் தேர் குறுகலான தெருவில் திரும்பும்போது சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றொரு மாணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு முதல்வர் விஜய் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார்.
திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா கடந்த மே 22, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 14 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் நிகழ்வின் 9வது நாளான மே 302, 2026 நேற்று வைகாசிி விசாகத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இஇதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுந்தனர்.




காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த நிலையில் குறுகலான சாலையில் திரும்பும்போது சுவற்றுக்கும் தேரின் சுவற்றுக்கும் இடையில் சிக்கி கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஹர்ஷவர்தன் என்பவர் உயிரிழந்தார். நெஞ்சு எலும்பு உடைந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மற்றொரு மாணவர் சஷ்டிகன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு#CMJosephVijay pic.twitter.com/fWkeqm8iBQ
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 31, 2026
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்செங்கோட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தேர் திருவிழாவில் இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் விஜய் ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அறிவித்திருக்கிறார். மேலும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய் காயமடைந்து மருத்துவமனையிலுள்ள இளைஞருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.