சிங்கப்பெண் அதிரடிப்படை – 18 காவல்துறையினர் நியமனம்
Singappen Special Task Force : சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு 18 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான எஸ்பி, டிஎஸ்பிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 பேரை நியமித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மே 28 : தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தை ஏற்கனவே மே 27, 2026 தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் மே 29, 2026 அன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்து. இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனால் மீண்டும் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2 முறை இந்த திட்டத்தின் துவக்க விழா ரத்து செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு 18 போலீஸார் நியமனம்
இந்த நிலையில் சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு 18 காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான எஸ்பி, டிஎஸ்பிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 பேரை நியமித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜி பவானீஸ்வரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிங்கப்பெண்கள் சிறப்பு படை குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு காவல்துறையினருக்கு இணையாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வகையில் இந்த படை உருவாக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : பயணிகள் கவனத்திற்கு! ஜூன் 1 முதல் சென்னை புறநகர் ரயில்களுக்கு புதிய டைமிங்..
சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் இடம்பெறுவார்கள். இந்தப சிறப்பு படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை நிலை காவல் கண்காணிப்பாளர்கள், 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனுக்குடன் நடடிக்கை எடுக்கும் என்றும் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன் தடுக்கப்படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடையினருக்காக பிரத்தேயக சீருடைகள் வடிவமைகக்கப்பட்டுள்ளது. மற்ற காவல்துறையினரிடம் இருந்து தனித்து தெரிவதற்காக இவர்களுக்கு புதிய சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கரு நீல வண்ண சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிற தொப்பி, பெல்ட் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே வாரத்தில் மீண்டும் திறப்பு.. தவெக பெயரைப் பயன்படுத்தி முறைகேடு?
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை அறிமுகப்படுத்தப்படவுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஐடி நிறுவன பகுதிகளில் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். முதற்கட்டமாக இந்த திட்டம் சென்னையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.