AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விண்ணை தொடும் விமான கட்டணம்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் விலை.. சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?

Airfares To Chennai Increased: தமிழகத்தில் சென்னைக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்த பொது மக்கள் வெளியூர் திரும்பும் நிலையில், இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

விண்ணை தொடும் விமான கட்டணம்.. ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் விலை.. சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 27 Apr 2026 10:09 AM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியூர்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள், தங்களது வாக்கை செலுத்தி விட்டு மீண்டும் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்ல தொடங்கி உள்ளனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் திட்டமிட்ட நாளில் மற்றும் திட்டமிட்ட நேரத்தில் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் விமான பயணத்தை நாடும் நிலை உள்ளது.

விமான பயணத்தை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நிலை

ஆனால், அந்த விமான பயணத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதன் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. தற்போது, நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) நள்ளிரவு மீண்டும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை அந்தந்த நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால், தமிழகத்துக்குள் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை வரும் விமானத்துக்கான கட்டணமும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

  • மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு செல்வதற்கு வழக்கமான நாட்களில் டிக்கெட் கட்டணம் ரூ.5,099- ஆக இருந்தது. தற்போது, அந்த கட்டணம் ரூ.32,508- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.5,354- ஆக இருந்தது. தற்போது, அந்த கட்டணம் ரூ.17,089- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது,
  • திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.4,551- ஆக இருந்த நிலையில், தற்போது, விமான டிக்கெட் கட்டணம் ரூ.14,310- ஆக உயர்ந்துள்ளது.
  • கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.4,634- ஆக இருந்த நிலையில், தற்போதைய டிக்கெட் கட்டணம் ரூ.11,149- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடும் சிரமத்தை சந்திக்கும் பொது மக்கள்

தமிழகத்தில் உள் விமான சேவைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இருந்தாலும், விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!

Follow Us