மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
Chennai Temperature Will Exceed: தமிழகத்தில் மே 1- ஆம் தேதி முதல் தரைக்காற்று வீசும் திசை மாறுபடுவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை தாண்டி பதிவாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
தமிழகத்தில் தரைக் காற்று வீசும் திசை மாறுபாடு காரணமாக மே 1- ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை தாண்டி பதிவாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு திசை காற்று அதாவது தரைக்காற்று ஆரம்பிக்கவில்லை. தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள உள் பகுதிகளில் 37 முதல் 38 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. கடலோரப் பகுதிகளில் 35 முதல் 36 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகப்படியாக இருப்பதன் காரணமாக பிசுபிசுப்பு உணர்வு இருந்து வருகிறது. நிகழாண்டு வெயிலின் தாக்கம் 40 டிகிரியை தற்போது வரை தொடவில்லை. ஆனால், தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது காற்றின் திசை கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி மாறும்.
மே 1- ஆம் தேதி முதல் தரைக்காற்று வீசும்
பொதுவாக கடலோர மாவட்டங்களில் ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய உள் மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் தரைக்காற்று தொடங்கியவுடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வெப்ப காற்று வெளியேற வாய்ப்பு உள்ளது. அதன்படி, மே 1- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் வறண்ட காற்று மேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. இதனால், ஆந்திராவை ஒட்டி உள்ள மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் மாவட்டத்தின் உள்பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!




2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
தற்போது, பதிவாகி வரும் வெப்பத்தை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதங்களில் போதிய அளவு மழை பெய்தது. இதனால் தற்போது ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையை இருந்து வருகிறது. இதனால், மே 1- ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கும்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரியை தாண்டு வெயில்
சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்ட வாய்ப்பு உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம். உள் தமிழகம் தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் மழை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். ஏற்கெனவே, தமிழகத்தில் வெயலின் தாக்கம் கடுமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!