AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!

Cracker Factory Accident NHRC Notice: விருதுநகர் மாவட்டத்தில் இரு பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 26 Apr 2026 08:29 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த வனஜா பட்டாசு ஆலையில் கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அடுத்தடுத்து 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் பட்டாசு ஆலை உரிமையாளரான முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரியை தேடி வருகின்றனர். மேலும், அவரது கணவர் முத்து மாணிக்கம் மற்றும் பட்டாசு ஆலையின் உள் குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்துக்கு சிறிது நாட்களுக்கு முன்னதாக வெம்பக்கோட்டை, கே . சத்திரப்பட்டியில் பட்டாசு விபத்து நடைபெற்றது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

இந்த விபத்தில் சுமார் 4 பெயர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில், இரு பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்து உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் பாடப்புத்தகங்கள்.. ஜூன் 1-இல் மாணவர்களுக்கு விநியோகம்!

இழப்பீடு – வழக்கு விசாரணை தகவல்கள் குறிப்பிட வேண்டும்

மேலும், பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களின் உடல்நிலை மற்றும் வழக்கு விசாரணை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறித்த விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவமும், உயிரிழப்பு சம்பவமும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதே போல, நேற்று தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

11 மணி முதல் 3 மணி வரை பட்டாசு தொழிலுக்கு தடை

இந்த தொடர் வெடி விபத்து சம்பவம் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பட்டாசு தொழில் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல, தமிழகத்திலும் மதிய உச்சி வெயில் வேளையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியை தவிர்க்கலாம் என நீதிமன்றமும் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், 25 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டதுடன், கொண்டு அறிக்கையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: குடிக்க தண்ணீர் கேட்பது போல நாடகம்.. மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை அபேஸ்.. 2 கல்லூரி மாணவிகள் கைது!

Follow Us