சிறுமி பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை.. 9 ஆண்டுகளுக்கு பின் நீதி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!
Kanniyakumari Girl Harassment Case: கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தும் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு, பொன்கலை பகுதியை சேர்ந்த வின்சன்ட் என்பவர் மகன் அனில் குமார் (27 வயது). இவர், கடந்த 2017- ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கூறப்படுகிறது. இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ சட்டம், எ. ஸ்., எஸ். டி. ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அனில் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இறுதிக் கட்டத்தை எட்டிய போக்ஸோ வழக்கு விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதில், பாலியல் தொந்தரவுக்குள்ளான சிறுமி, அவரது பெற்றோர், குற்றஞ்சாட்டப்பட்ட அனில் குமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
மேலும் படிக்க: மேலும் ஒரு வருஷத்துக்கு நோ ‘மயோனைஸ்’.. தடையை நீட்டித்தது தமிழக அரசு.. அசைவ பிரியர்களுக்கு அடுத்த அடி!




போக்ஸோ வழக்கில் 16 ஆண்டுகள் சிறை
இதில், போக்ஸோ நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி அனில் குமாருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதில், காவல் துறை மற்றும் நீதித்துறை உரிய தண்டனை வழங்கினாலும் தொடர் பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருது தொடர் கதையாகி வருகிறது. எனவே, இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமர் எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டு
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர காரணமாக இருந்த புலன் விசாரணை அதிகாரிகள், நீதிமன்ற காவலர், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அனைத்து மகளிர் ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.
மேலும் படிக்க: வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!