AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேலும் ஒரு வருஷத்துக்கு நோ ‘மயோனைஸ்’.. தடையை நீட்டித்தது தமிழக அரசு.. அசைவ பிரியர்களுக்கு அடுத்த அடி!

Mayonnaise Ban In Tamil Nadu : தமிழகத்தில் மயோனைஸ் மீது இருந்து வரும் தடை மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அசைவ பிரியர்கள் மேலும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் .

மேலும் ஒரு வருஷத்துக்கு நோ ‘மயோனைஸ்’.. தடையை நீட்டித்தது தமிழக அரசு.. அசைவ பிரியர்களுக்கு அடுத்த அடி!
மயோனைஸ் மீதான தடை மேலும் ஒராண்டுக்கு நீட்டிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 25 Apr 2026 14:37 PM IST

தமிழகத்தில் முட்டையின் வெள்ளை கரு, காய்கறி ஆயில் மற்றும் வினிகர் ஆகியவற்றை சேர்த்து மயோனைஸ் தயார் செய்யப்படுகிறது. இந்த மயோனஸை சவர்மா, பர்கர் மற்றும் சான்ட்விச் ஆகிய உணவு வகைகள் உடன் சேர்த்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் மயோனைஸால் உணவுப் பொருட்களின் சுவை அதிக அளவு கூட்டப்படுகிறது. இதனால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு சவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் மயோனைஸை சேர்த்து உண்ணும் போது, நச்சுத்தன்மை ஏற்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் 2025- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் மயோனைஸ் விற்பனை தடை செய்யப்பட்டது. இதனால், அனைத்து விதமான ஹோட்டல்கள், அசைவ உணவு விற்பனை கடைகள் உள்ளிட்டவற்றில் மயோனைஸ் விற்பனை செய்யப்படவில்லை.

மயோனைஸ் மீதான தடை மேலும் ஒராண்டுக்கு நீட்டிப்பு

தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை கடந்த ஏப்ரல் 8- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், மயோனைஸ் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு அரசாணை பிறப்பித்து வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே மயோனைஸ் மீதான தடை ஓராண்டு காலத்துக்கு இருந்து வந்தது. இதனால், அசைவத்திற்கு அதிக அளவு பயன்படுத்தப்படும் மயோனைஸ் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டதால் அசைவ பிரியர்கள் கவலையில் இருந்து வந்தனர்.

மேலும் படிக்க: “வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது”.. அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுறுத்தல்..

கவலையில் ஆழ்ந்துள்ள அசைவ பிரியர்கள்

இந்த நிலையில், மயோனைஸ் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தால் அசைவ பிரியர்கள் இடையே மீண்டும் கவலை அதிகரித்துள்ளது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் சில இடங்களில் ஷவர்மா சாப்பிட்ட சிறுவர்கள் மற்றும் இளம் பெண்கள் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், சவர்மா சாப்பிடுவது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது. மேலும், ஷவர்மா என்ற உணவு பொருளை சாப்பிடக்கூடாது என்ற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக எழுந்தது.

சில ஹோட்டல்களில் மயோனைஸ் பயன்பாடு

இதைத்தொடர்ந்து, மயோனைஸ் என்பதை அசைவ உணவுகளுடன் சாப்பிடும் போது, அதுவும் மனிதர்களுக்கு நச்சு தன்மையை ஏற்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, அதன் மீதான தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மயோனைஸ் மீது மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக மயோனைஸ் மீது தடை விதிக்கப்பட்டிருந்தாலும் சில ஹோட்டல்கள் மற்றும் அசைவ உணவு விற்பனை கடைகளில் மயோனைஸ் விற்பனை நடைபெற்று வருகிறது. சில கடைகளில் பாக்கெட்டுகளில் மயோனைஸ்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. “தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழல் மாறும்”.. திருமாவளவன்

Follow Us