AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேனி: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்..

தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் அதிகமாக செயல்பட்டு வரும் நிலையில், குறிப்பாக வெயில் காலங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் கட்டனார் பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான “வனஜா” என்ற தனியார் பட்டாசு ஆலைவில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேனி: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Apr 2026 13:39 PM IST

தேனி, ஏப்ரல் 25, 2026: தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே, முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான “லட்சுமி” பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பட்டாசு தயாரிக்கும் இரசாயனப் பொருட்களை சேமிக்கும் வைப்பறையாக இந்த ஆலை செயல்பட்டு வந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தே ர்தலை முன்னிட்டு இந்த ஆலை கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேர்:

தகவல் அறிந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தீனதயாளன் மற்றும் சூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள்.. சென்னை மாநகராட்சி தகவல்..

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் வெடி விபத்துக்கள்:

தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் அதிகமாக செயல்பட்டு வரும் நிலையில், குறிப்பாக வெயில் காலங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் கட்டனார் பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான “வனஜா” என்ற தனியார் பட்டாசு ஆலைவில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த விபத்தில், உராய்வு காரணமாக திடீரென ஏற்பட்ட வெடிப்பால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் சிக்கினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அணைத்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் படிக்க: நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. 25- ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. ஒரே இடத்தில் உடல்களை தகனம் செய்ய முடிவு?

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 16 பெண்கள் அடங்குவர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்ட 5 தீயணைப்பு வீரர்களும் 3 காவல்துறையினரும் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25 தொழிலாளர்கள் உயிரிழந்த இந்த பட்டாசு ஆலை விபத்து தமிழகத்தையே உலுக்கியது. பட்டாசு தொழிலாளர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆலை நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us