AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை போறீங்களா.. இன்று முதல் அதிரடி போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் உள்ளே!

Traffic Changes In Chennai: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்காக சொந்த ஊர் சென்ற பொது மக்கள் சென்னை திரும்ப உள்ளனர். இதனால், இன்று மற்றும் நாளை சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை போறீங்களா.. இன்று முதல் அதிரடி போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் உள்ளே!
சென்னையில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 26 Apr 2026 06:22 AM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 19.50 லட்சம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) மற்றும் நாளை திங்கள்கிழமை (ஏப்ரல் 27) ஆகிய தேதிகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரே நாளில் ஏராளமான பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், குறித்த நேரத்தில் பொதுமக்கள் தங்களது இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, இதனை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்று பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நகரை சென்றடையலாம்.

சிங்கப்பெருமாள் கோவில் வழியாக போக்குவரத்து

இதே போல, சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பி விடப்படும். அந்தப் பகுதியில் இருந்து அந்த வாகனங்கள் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை சென்று சேரலாம். மேலும், புதுச்சேரி மாநிலம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை வழியாக சென்னைக்கு வந்து சேரலாம்.

மேலும் படிக்க: இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!

சென்னையில் 2 நாள்களை போக்குவரத்து மாற்றம்

எனவே, சென்னையில் இரு நாட்கள் மாற்றி அமைக்கப்பட்ட இந்த போக்குவரத்து மாற்றங்களை பின்பற்றி பொதுமக்கள் தங்களது இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று சேரலாம். மேலும், போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்றவாறு சீரான போக்குவரத்துக்கு பொதுமக்கள் உதவி அளிக்க வேண்டும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். பொதுவாகவே, பண்டிகை காலங்கள், அரசு விடுமுறைகள், கோடைகால விடுமுறைகள் ஆகிய காலங்களில் சென்னையில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.

போக்குவரத்தால் பல மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பிப்பு

அதன்படி, அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புவது வழக்கம். இதில், ஒரே நாளில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வாகனங்களில் சென்னையை நோக்கி வரும்போது, பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகி வருகிறது. தற்போது, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: சிறுமி பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை.. 9 ஆண்டுகளுக்கு பின் நீதி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!

Follow Us