தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
Rain Alert For Several Parts of Tamil Nadu | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 27 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்ட காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஹேப்பி நியூஸ்! மே 2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ஏப்ரல் 28, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : “தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!