AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs England Test Series 2025: இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் புதிய டிராபி.. என்ன தெரியுமா?

Anderson-Tendulkar Trophy: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 2025 ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வெற்றியாளருக்கு பட்டோடி பதக்கம் வழங்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையின் பேரில் பட்டோடி பதக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

India vs England Test Series 2025: இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் புதிய டிராபி.. என்ன தெரியுமா?
ஆண்டர்சன் - சச்சின் டெண்டுல்கர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Jun 2025 08:00 AM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் (India vs England Test Series 2025) தங்கள் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியை தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்ஸில் நடைபெறுகிறது. இந்தநிலையில், வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் வெற்றியாளருக்கு பட்டோடி (Mansoor Ali Khan Pataudi) பதக்கம் வழங்கப்படும் என்று இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மூலம், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் பட்டோடி பெயர் நிலைத்திருக்கும்.

பட்டோடி பதக்கம்:

முன்னதாக, இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை பட்டோடி கோப்பையின் பெயரை டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை என்று மாற்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. சமீபத்தில், லார்ட்ஸில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது இது முறையாக அறிவிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து காரணமாக பெயர் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்த டிராபி பெயர் மாற்றத்தை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் உள்பட பலரும் விமர்சனம் செய்தனர்.

டெண்டுகல்கர் – ஆண்டர்சன் டிராபி

மேலும், பட்டோரி என்ற பெயரே இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் இடையிலான தொடருக்கு இருக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தானே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தை அணுகி கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கையில், “ டெண்டுகல்கர் – ஆண்டர்சன் டிராபி என்று பெயரை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தபோது, டெண்டுல்கர் அவர்களை அணுகி, பட்டோடி என்ற பெயரே இந்தியா – இங்கிலாந்து போட்டியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஐசிசி தலைவர் ஜெய்ஷாவும் இதுகுறித்து பேசினார். இதையடுத்து, இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பட்டோடி பதக்கத்தை வென்ற கேப்டனுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி, டிராபியின் பெயரை மாற்றுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற 2025 ஜூன் 19ம் தேதி அதாவது லீட்ஸில் தொடரின் தொடக்க போட்டிக்கு ஒருநாள் முன்னதாக அறிவிக்கப்படும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அதேநேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்களை எடுத்தவர் ஆண்டர்சன் ஆவார். இவர்கள், இருவரையும் கௌரவிக்கும் விதமாகவே இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Follow Us