AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Digvesh Rathi: 5 பந்துகளில் 5 விக்கெட்கள்! உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் கலக்கிய திக்வேஷ் ரதி..!

Digvesh Rathi's 5 Wickets in 5 Balls: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் சிறப்பாக செயல்பட்ட இவரது இந்த சாதனை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது 5/5 சாதனை, லசித் மலிங்காவின் 4/4 சாதனையை விஞ்சியது. இது திக்வேஷ் ரதியின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாக உள்ளது.

Digvesh Rathi: 5 பந்துகளில் 5 விக்கெட்கள்! உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் கலக்கிய திக்வேஷ் ரதி..!
திக்வேஷ் ரதிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jun 2025 16:27 PM IST

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, தனது ஸ்பெஷலான நோட்புக் கொண்டாட்டத்திற்காக சீசன் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வந்தார். இவரது கொண்டாட்டம் எதிரணி வீரர்கள் அதிகம் எரிச்சல் அடைய செய்ததன்காரணம், திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இந்தநிலையில், திக்வேஷ் ரதி (Digvesh Rathi) அசாத்திய சாதனை படைத்து, தற்போது இந்தியா முழுவதும் தன் பெயரை மீண்டும் ஒலிக்க செய்துள்ளார். அதாவது, உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக் ஒன்றில் திக்வேஷ் ரதி 5 பந்துகளில் தொடர்ந்து 5 விக்கெட்டுகளை கலக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

போட்டியில் நடந்தது என்ன..?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, திக்வேஷ் ரதி 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீடியோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீடியோவை தற்செயலாக பார்த்தேன். ஐபிஎல் 2025ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ரதியை ஒரு பிரேகவுட் ஸ்டாராக மாற்றியுள்ளது” என தெரிவித்திருந்தார். போட்டியை பற்றி பேசுகையில், “ உள்ளூர் டி20 கிரிக்கெட் ஒன்றில் திக்வேஷ் ரதி இன்னிங்ஸின் 15வது ஓவரை வீசினார். அப்போது எதிரணி 160 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த ஓவரை வீசிய ரதி முதல் 4 பந்துகளில் 4 பேட்ஸ்மேன்களை அவுட் செய்தார்.

முதல் 3 பேட்ஸ்மேன்கள் வலது கைபேட்ஸ்மேன்கள் ரதியில் கூக்லி பந்தை கணிக்க முடியாமல் அவுட்டானார்கள். இதன்பிறகு, 5வதாக பேட்ஸ்மேனை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்து, அசத்தினர். இவரின் இந்த செயல்திறன் உற்சாகத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக வருவதற்கான வாய்ப்பையும் கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த போட்டி ஐபிஎல் 2025க்கு முந்தையது, இதன் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சஞ்சீவ் கோயங்கா பகிர்ந்த வீடியோ:


முன்னதாக, இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், இப்போது திக்வேஷ் ரதி அவரை விட ஒரு படி மேலே சென்று 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், இந்த சாதனையை எப்போது செய்தார் என்பது யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.

யார் இந்த திக்வேஷ் ரதி..?

டெல்லியில் பிறந்த 25 வயதான திக்வேஷ் ரதியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது. ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 15 டி20 போட்டிகளில் விளையாடி, 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Follow Us