Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Joe Root: ராகுல் டிராவிட் ரெக்கார்டை முறியடிக்க காத்திருப்பு.. இந்தியாவுக்கு எதிராக கலக்குவாரா ஜோ ரூட்?

India vs England Test Series 2025: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 2025 டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. டிராவிட்டின் 13,288 ரன்கள் மற்றும் 36 சதங்களை விட, ரூட் வெகு அருகில் உள்ளார். இந்த தொடர் ரூட்டுக்கு ஒரு வரலாற்று சாதனை படைக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Joe Root: ராகுல் டிராவிட் ரெக்கார்டை முறியடிக்க காத்திருப்பு.. இந்தியாவுக்கு எதிராக கலக்குவாரா ஜோ ரூட்?
ராகுல் டிராவிட் - ஜோ ரூட் Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 17 Jun 2025 08:00 AM

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் (India vs England Test Series 2025) கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20 முதல் நடைபெறும். இந்தத் தொடருக்கு இந்திய வீரர்கள் கடுமையாகத் தயாராகி வருகின்றனர். இந்தத் தொடர் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் ஒரு பகுதியாகும், மேலும் இது இந்திய அணிக்கு ஒரு புதிய தொடக்கமாகும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், சுப்மன் கில் தலைமையில் இது முதல் டெஸ்ட் தொடராகும். முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜோ ரூட் (Joe Root) வரலாறு படைக்கும் வாய்ப்புள்ளது. இதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ராகுல் டிராவிட் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்..?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த இந்தியாவின் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்புள்ளது. ராகுல் டிராவிட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 164 போட்டிகளில் விளையாடி 36 சதங்களின் உதவியுடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 63 அரை சதங்களையும் அடித்துள்ளார். அதேநேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 153 போட்டிகளில் விளையாடி 13,006 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் எடுத்த டிராவிட்டின் சாதனையை ரூட்டுக்கு இன்னும் 282 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

அதிக ரன்கள் கடக்க வாய்ப்பு:

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூட் இதுவரை 36 சதங்களையும் அடித்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் சதங்களில் ரூட் தற்போது டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார். இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிடான இந்த தொடரில் ரூட், ராகுல் டிராவிட்டின் சத சாதனையை முறியடிக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் ஜோ ரூட் மட்டுமே. டெஸ்ட் ரன்களைப் பொறுத்தவரை ரூட் விரைவில் டிராவிட், ஜாக் காலிஸ் மற்றும் ரிக்கி பாண்டிங்கை முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ரூட் இந்தியாவுக்கு எதிராக 373 ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். டெஸ்ட் தொடர் 2025  ஜூன் 20 முதல் ஹெடிங்லியில் தொடங்குகிறது. தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி 2025 ஜூலை 31 முதல் ஓவலில் நடைபெறும்.