AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AB de Villiers: விராட் கோலி என்னிடம் இதனால் பேசவில்லை.. பிரிவுக்கு காரணம் என்ன..? ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம்!

Virat Kohli And Ab De Villiers Fight: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டிருந்த தவறான புரிதலுக்குப் பிறகு, அவர்களின் நட்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ஏபி டி வில்லியர்ஸ் தனது தவறை ஒப்புக்கொண்டார். விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாதது குறித்து டி வில்லியர்ஸ் தெரிவித்த தகவலால் ஏற்பட்ட நிஜநிலையே இதற்கு காரணம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து பெங்களூருவின் வெற்றியைக் கொண்டாடினர்.

AB de Villiers: விராட் கோலி என்னிடம் இதனால் பேசவில்லை.. பிரிவுக்கு காரணம் என்ன..? ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம்!
விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jun 2025 14:48 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்2025ன் (IPL 2025) இறுதிப் போட்டியானது வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru), ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸின் (Ab De Villiers) நட்பையும் மக்கள் கண்டு கொண்டாடினர். இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒன்றாக விளையாடியதிலிருந்து இந்த இருவரின் நட்பும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த இரண்டு வீரர்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகவும், அது தற்போது சரியாகிவிட்டதாகவும் ஏபி டி வில்லியர்ஸே தெரிவித்துள்ளார்.

விராட் மற்றும் டிவில்லியர்ஸ் இடையேயான சண்டை:

இதுகுறித்து முன்னாள் ​​தென்னாப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட்.காமிடம் பேசியபோது, “கடந்த ஆண்டு நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். அதன் பிறகு, விராட் மற்றும் எனக்கும் இடையேயான நட்பு விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, கோலி பல மாதங்களாக தன்னைப் புறக்கணித்தார். இப்போது அது சரிசெய்யப்பட்டது” என்றார்.

மனம் திறந்த ஏபி டி வில்லியர்ஸ்:

முன்னதாக, கடந்த 2024 ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பெயரை விலக்கிக் கொண்டார். அப்போது, விராட் கோலி சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். விராட் கோலி ஆதரவாக பேசிய ஏபி டி வில்லியர்ஸ், “விராட் கோலிக்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இங்கிலாந்து தொடரில் கோலி விளையாடவில்லை” என்று தெரிவித்தார். தனது தனிப்பட்ட விஷயங்களை ஏபி டி வில்லியர்ஸ் பொதுவெளியில் கூறியதாக விராட் கோலி கோபம் கொண்டதாக தெரிகிறது.

ஐபிஎல்லில் மீண்டும் ஒன்றாக விராட்-டி வில்லியர்ஸ்:

விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றபோது ஒன்றாக வெற்றியை கொண்டாடினர். விராட்டுடனான விரிசலுக்குப் பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவருக்கும் இடையிலான உரையாடல் மீண்டும் தொடங்கியுள்ளதாக டிவில்லியர்ஸ் கூறினார். இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், ”இப்போது விராட்டும் நானும் மீண்டும் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

விராட்-அனுஷ்காவின் குழந்தைகள்:

கடந்த 2017ம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு, இந்த தம்பதியருக்கு வாமிகா என்று மகள் பிறந்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு, அனுஷ்கா-விராட் தம்பதிக்கு அகே என்று ஒரு மகன் பிறந்தார். விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் விஷயங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். எனவே இதுவரை அவர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை கூட சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us