Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England Test Series: சச்சின் முதல் தோனி வரை.. இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!

Top Indian Batsmen England: 2025 ஜூனில் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த 5 இந்திய பேட்ஸ்மேன்களைப் பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் இந்தப் பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கின்றனர். அவர்களின் ரன்கள், சராசரி, சதங்கள் மற்றும் அரைசதங்கள் ஆகியவற்றை இங்கே காணலாம்.

India vs England Test Series: சச்சின் முதல் தோனி வரை.. இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!
விராட் கோலி - எம்.எஸ்.தோனி - டிராவிட் - சச்சின்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jun 2025 08:00 AM

சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் (India vs England Test Series) களமிறங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் ஜாம்பவான்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வுக்குப் பிறகு, சுப்மன் கில் தலைமையிலான இளம் படை கொண்ட இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் என்ன செய்ய போகிறது என்பதை காண, இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இங்கிலாந்து மண்ணில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மற்றும் சவாலான சூழ்நிலையில், பேட்ஸ்மேன்களின் செயல்திறனே இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இங்கிலாந்தில் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டில் எந்த சாதனையை எடுத்தாலும் முதல் இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.31 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 8 அரைசதங்களுடன் 1,575 ரன்கள் எடுத்துள்ளார்.

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள பந்துவீச்சாளர் பந்துவீச பயந்த ராகுல் டிராவிட், இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து மண்ணில் ராகுல் டிராவிட் இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 69.94 என்ற சராசரியுடன் 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,189 ரன்கள் எடுத்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

சச்சின் டெண்டுல்கருக்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவிந்திருந்த சுனில் கவாஸ்கர் இங்கிலாந்தில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் இதுவரை இங்கிலாந்து மண்ணில் 16 டெஸ்ட் போட்டிகளில் 41.14 சராசரியுடன் 2 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் உதவியுடன் 1152 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி 4வது இடத்தில் உள்ளார். கோலி இதுவரை இங்கிலாந்து மண்ணில்  17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33.21 சராசரியுடன் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1096 ரன்கள் எடுத்துள்ளார்.

திலீப் வெங்சர்க்கார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் திலீப் வெங்சர்க்கார் 5வது இடத்தில் உள்ளார். வெங்சர்க்கார் 13 டெஸ்ட் போட்டிகளில் 48.00 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 960 ரன்கள் எடுத்தார்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக இந்த பட்டியலில் கங்குலி, தோனி, புஜாரா, ரஹானே பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

  • சவுரவ் கங்குலி – 915 ரன்கள் (9 டெஸ்ட்)
  • சேதேஷ்வர் புஜாரா – 870 ரன்கள் (16 டெஸ்ட்)
  • அஜிங்க்யா ரஹானே – 864 ரன்கள் (16 டெஸ்ட்)
  • குண்டப்பா விஸ்வநாத் – 858 ரன்கள் (13 டெஸ்ட்)
  • எம்.எஸ். தோனி – 778 ரன்கள் (12 டெஸ்ட்)